அன்புடையீர் வணக்கம்!

நான் ஒரு தமிழன். எழுத்துக்கள் மேல் உள்ள பற்றுக்களால், இந்த வலைத்தளத்தில் எழுதத் தொடங்கியுள்ளேன்.
தமிழ், இலக்கியம், சிந்தனை, விழிப்புணர்வு, சங்கத் தமிழ் முதலியவற்றில் ஈடுபாடு கொண்டு எனது எழுத்துப் பயணத்தை தொடங்கியுள்ளேன்.

தமிழைப் படிக்க படிக்க தமிழ் ஆர்வம் மட்டும் இல்லாமல், மனதில் ஒரு தைரியமும், விழிப்புணர்வும், தன்மானக் கோபமும் சேர்ந்து வளர்கின்றது.

தமிழ் வெறும் இலக்கிய மொழி அல்ல. அது வாழ்வியல் மொழி. சங்ககாலப் புலவர்கள் வெறும் கவிதைகளை மட்டும் தொகுத்து வைத்துவிட்டு செல்லவில்லை. நாம் ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும், விழிப்புணர்வோடு இருக்கவேண்டும், காலத்திற்கு ஏற்றார் போல் தம்மை வளர்ச்சி செய்ய வேண்டும், எப்படி நம் பெயரை காலம் கடந்து செல்ல வேண்டும், அறிவியலை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

“வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்; நித்தம் நடையும் நடைபழக்கம் – ஔவையார் “

நம் முன்னோர்கள், எழுத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் நம்மை உயரச் செய்வதற்கு.
அனைவரும் தமிழ் கற்போம்; எழுத்துக்கள் மூலம் தங்கள் சிந்தனைகளை உலகறியச் செய்வோம்.

நான் வெறும் மாணவன் தான். எழுத்துப்பிழை எவையேனும் இருந்தால் மன்னிக்கவும். 

வாழ்க தமிழ்! வளர்க நல்லதொரு சமுதாயம்!

– ச. சமரசம்

[DISPLAY_ULTIMATE_PLUS]

Fields marked with an * are required