காகம் என்றொரு பெயரும் உண்டு.

பொதுவாக ‘உனக்குப் பிடித்த பறவை எது’ என்று கேட்டால், காக்கையை யாரும் கூற மாட்டார்கள்.

ஆனால், விழாக்கள் அன்று வீட்டிற்கு வரும் காக்கையைத் தன் முன்னோர்கள் என ஒப்பிடும் பழக்கம் உண்டு பலரிடம். அன்று காக்கைக்கு விருந்துதான். கா கா கா என்று அழைப்பு விடுத்து பல பண்டங்களுடன் உணவு உண்டு. பிற நாட்களில் விரட்டப்படும். 🙂

காக்கைக்குத் தனிச் சிறப்பு உண்டு. உடல் பலம் பெரிதாக இல்லையென்றாலும், தன்குஞ்சுகளுக்கு ஆபத்து என்றால், வேட்டையாடும் கழுகே வந்தாலும் உடனே போராளியாக மாறித் தன் குடும்பத்தைக் காக்கும் இயன்றவரையில்.

மேலும், காக்கைகள் கூட்டமாக தன் இனத்தை அழைத்து உணவுண்ணும் செயல் அழாகான ஒன்று. ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு காகம் ஆகும்.

காக்கையின் முக்கியமான சிறப்பு, அது செய்யும் இயற்கையைக் காக்கும் பணி தான்.
காக்கையால் தான் இன்று நம்மூரில் பல்லாயிரம் மரங்கள் இருக்கின்றன. காக்கை பழத்தைச் சாப்பிட்டு விதையை வேறு இடத்தில் போட்டு மரம் வளர்க்கும் தொழிலை காலங்காலமாக செய்து கொண்டு வருகின்றது. இப்படி மரம் வளர்த்து இயற்கையைக் காப்பதால் தான் ‘காக்கை : காக்கும் ‘ என்ற பெயர் போலிற்று.

காக்கையை மனிதன் வெறுக்கும் முதல் காரணம் அதன் நிறம் தான்.
ஆனால் அந்த கருப்பு தான் அதைக் காக்கின்றது.

ஒருவேளை, போலிப் பார்வைகளுக்கு அழகாகத் தெரிவது போல் வெண்மையாக இருந்திருந்தால், கூண்டில் இருந்திருக்கும் இல்லையென்றால் நமது தட்டில் இருந்திருக்கும்.

‘சில நல்லவர்கள் இருக்கறதாலத்தான் மழை இன்னும் பெய்யுது’ என்ற வாக்கியம் உண்டு.
உண்மையில் காக்கையைப்போல் ஒரு சில உயிரினங்கள் வாழ்வதால் தான் இயற்கைக் காக்கப்பட்டு மழைப் பொழிகிறது!

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்;
வெயில் நாட்களில், பறவைகளுக்குத் தண்ணீரும், தானியங்களும் வைப்போம்!
நாமும் ஒற்றுமையாக வாழ்ந்து இயற்கையைப் பாதுகாப்போம்!

குறள் – 637

“செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை அறிந்து செயல்”

நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.

நன்றி,
– சமரசம்

9 comments

 1. ஒருவேளை, போலிப் பார்வைகளுக்கு அழகாகத் தெரிவது போல் வெண்மையாக இருந்திருந்தால், கூண்டில் இருந்திருக்கும் இல்லையென்றால் நமது தட்டில் இருந்திருக்கும்.

  Highlight “நமது தட்டில் இருந்திருக்கும்”…

  Different view “காக்கை : காக்கும்”

  Nice…

  1. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி தோழரே.
   இங்கு அனைத்தும் போலி அழகை நோக்கி மட்டுமே செல்கிறது.

 2. From childhood itself, I used to be jealous of crow. I will tell my friends, that I should be born as crow in next birth!! 🙂 what a wonderful life it has.. I was astonished that you had the same thought like me. Superb. keep writing!! 🙂

  1. அருமை. உங்கள் கருத்து இந்த பதிவுக்கு பெருமையை சேர்க்கின்றது.

 3. தேசிய பறவையாக வேண்டிய எல்லாம் தகுதிகளும் உடைய பறவை!

  1. ஆமாம் சகோதரி, உண்மைதான்.

   ஆனால், அனைத்து உண்மைகள் மறைக்கப்படுகின்றதே இங்கு 🙁

 4. I think crow has memory power. when i was studying in school my mother used to keep rice for crow everyday morning once she completes her cooking. I thought I should also try that. I started keeping food every day, some days if I am not cooking I wont keep any food those days it comes on the same time and make such a loud noise looking for food. Good writing Sam! Appreciate it.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *