மஞ்சள் துணிப்பையைப் பயன்படுத்துவோரையும் , கடலை மிட்டாய் உண்கிறவரையும் தாழ்வாக நினைக்கின்றோம் இன்று.
மேற்கத்திய தொழில்நுட்பத்தைப் பார்த்து வாயைப் பிளந்து அறியாமையில் பலவற்றை இழந்துவிட்டோம்.

பாலிதீன் பையை அறிமுகம் செய்யும்போது, அது ஈரம் படாது, எடை குறைவு விலை குறைவு என்று அறிமுகப் படுத்தி, நாம் பயன்படுத்திய துணிப்பைகளை அழித்துவிட்டார்கள். (அழித்துவிட்டோம் என்பதே சரியானது)

பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்கள் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மண்ணில் மக்காது. நிலம் கெடும், நீர் கெடும். நீர் வாழ் உயிரினங்கள் கெடும். காலப்போக்கில் நமக்கு புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் நம்முடன் உளம்வர ஆரமித்துவிட்டன.

bags

முன்பு நாம் பயன்படுத்திய துணிப்பை மண்ணில் மக்கக் கூடியது, துவைத்து துவைத்து பல முறை பயன்படுத்தலாம். அதிக எடையும் தாங்கும், பல வருடங்கள் நமக்கு உதவும் அவைகள். ஆனால், எதைப் பற்றியும் சிந்திக்காமல், புதிய பொருட்கள் அறிமுகமான உடனே அதைப் பற்றி ஆராயாமல் பயன்படுத்தத் தொடங்குகிறோம். இதனால் இன்று துணிப்பை தயாரிப்பும் குறைந்துவிட்டது.

இன்று மற்றொரு தவறு செய்கிறோம். காகிதப் பைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். காரணம், அது மண்ணில் மக்கள் கூடியது என்பதனால். உண்மை தான். அனால் அதே காகிதப் பை பல மரங்களின் உயிரை அறுக்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இல்லை, பழைய காதிதங்களை கொண்டு தானே தயாரிக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். தேவை அதிகரிக்க அதிகரிக்க, பிறகு மரங்களை வெட்டித்தான் தயாரிக்க முடியும்.

துணிப்பையை வெளியில் போட்டால் அது உரமாகும்
பிளாசுட்டிக் பையை வெளியில் போட்டால் அது நஞ்சாகும்

அடுத்து, வெளிநாட்டு உணவுப் பொருட்கள்.
உணவு பொருட்கள் ஒவ்வொரு நாட்டின் தட்பவெட்ப நிலையைப் பொறுத்து இருக்கும். அங்கு விளையக் கூடியவைகளையும் வாழும் உயிரின்களையும் பொறுத்தது. மேற்கத்திய நாடுகளில் அடர்த்தியான காடுகள் பல இருந்தாலும், பல்வேறு தாவர வகைகளும், மர வகைகளும் குறைவே.

3e76be25-4308-4282-8577-14f921db1793

நம் ஊரில் கிடைக்கும் கீரைகளும், மூலிகைகளும் கிடைக்காது. அதனால் அவர்கள் அங்கு கிடைப்பதை வைத்தே அவர்களின் உணவு முறைகள் இருக்கும். அவர்கள் உண்ணும் பீசா, ரொட்டி, இறைச்சி வகைகளை நாம் அங்கு சென்றால் உண்ணலாம் தவிர நம் நாட்டில் குடியேற்றி உண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அவைகளை இறக்குமதி செய்து, அவற்றை பெருமையாகக் கருதிய நாம் நம் ஊர்ப் பொருட்களை அழித்துக் கொண்டிருக்கின்றோம்.

கூழ் குடிப்பவன் தாழ்வானவன் அல்ல. கேழ்வரகு கொடுப்பதைப் பிற உணவுப் பொருட்கள் கொடுக்காது.
இட்டலியை போன்ற வேறு எதுவும் எளிதாகச்செரிக்காது.
கீரையைப் போல் வேறு எதுவும் எதிர்புச் சக்தியைக் கொடுக்காது.
நெல்லிக்கனி ஆப்பிளை விட பல மடங்கு ஆற்றல் கொண்டவை.
கொய்யாப்பழத்திற்கு நிகரான ஒரு பழம் இல்லை. 
நுங்கு சர்க்கரை நோய் வராமல் காக்கும். பனங் கற்கண்டு உடலைக் குளிரவைக்கும்.
பல்வேறு கிழங்கு வகைகள் இருக்கின்றன. அனால் உருளை தவிர எதுவும் பிழைக்க வில்லை.

b03wibnccaa79uj

அதிரசமும், கொழுக்கட்டையும், காராமணி உருண்டைகளை சிறந்த தின்பண்டங்கள் தான்.
நம் பாரம்பரிய தின்பண்டங்கள் அனைத்தும் எளிதில் செரிக்கக் கூடியவைகள் மற்றும் தாவர பொருட்களால் தயாரிக்கப்பட்டவைகள்..
இரண்டு மூன்று நாட்களில் நமிழ்த்துவிடும். அதனால் நமக்கு பல நாட்கள் வைத்து உண்ணும் தவறான பழக்கம் இல்லை அப்போது.

61603d4a-fd91-45c0-914c-84c9aa084512-1  (இன்று எத்தனைப் பேருக்குத் தெரியும் எங்கள் இலந்தவடையின் சுவையைப் பற்றி?)kodukkaapuli

 

இன்று கே.எப்.சி, பீசா, பர்கர் ஆகிய உணவுகளை விளம்பர படுத்துகிறார்கள். இதனால் நம் ஊர் பொருட்களுக்கு மதிப்பு குறைகின்றது. நம் அரசாங்கமும் எதை பற்றியும் கவலைப் படாமல், வெளிநாட்டு உணவுப் பொருட்களையும் உணவகங்களையும் நம் நாட்டில் உள்ளெ விட்டு நம் பாரம்பரிய உணவுகளையும், விவசாயத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். அனைவரும் வெளிநாட்டு உணவுகளை உண்கின்றோம் என்று கூறவில்லை. அனால், நம் பாரம்பரிய உணவுகளை குறைத்துவிட்டோம்.
பீசா, பர்கர், பெப்சி மட்டும் தான் வெளிநாட்டு பொருட்கள் அல்ல. கடலை எண்ணெயை மறந்துவிட்டு சூரியகாந்தி எண்ணெயைபப் பயன்படுத்த ஆரமித்துவிட்டோம். இது போல் பல உள்ளன. கீழே உள்ள பட்டியலை மறக்காமல் வாசித்துப் பாருங்கள். சிந்து பசு (சீமைப் பசு) நம் நாட்டிற்கு வந்த பிறகுதான் சர்க்கரை நோய்கள் உள்ளெ வர ஆரமித்தது. 

விளைவு இன்று சர்க்கரை நோய் இல்லாத குடும்பம் இல்லை. தொப்பை இல்லாத ஆண்கள் இல்லை.
மேலும் பல்வேறு வேதிப் பொருட்கள் கலந்த உணவுகளை உட்கொள்ளுவதால் சிறுவயதினருக்குப் பல்வேறு நோய்களும், இயக்கு நீர் குறைபாடுகளும் உண்டாகின்றன.

ஐந்து வயதிலேயே கண் கண்ணாடியைச் சுமந்து வருகிறார்கள் பிள்ளைகள். காரணம் நம் உணவு முறை மாற்றங்களும், உடலுழைப்பு குறைப்பாலும் தான். கீரையும், காய்கறிகளையும் சாப்பிட்டு ஓடி விளையாடும் குழந்தைக்கு இந்த நிலை வருமா? 

முட்டையில் வெள்ளை தனியாக, மஞ்சள் தனியாக பிரித்து, பின்பு குழாய்களில் வைத்து இது போல் ஒரு வடிவமைப்பாய் உருவாக்கி , தேவையின் போது வெட்டிக்கொள்ளும் முறையைப் பாருங்கள். பதப்படுத்திய பொருட்களின் விளைவு முதுமையில் மருத்துவமனையில் நேரத்தை செலவழிக்கும் போது தான் தெரியும். 

846198db-23ec-4eb9-82af-cf934dffd06b

 

சித்த மருத்துவத்திற்கும், ஆயுர்வேதத்திற்கும் நிகரான ஒன்று வேறு எதுவும் கிடையாது. நோய் வந்த உடனே குணமாக வேண்டும் என்று ஆங்கில மருத்துவத்திற்கு ஓடி விட்டோம். இன்று பல பக்க வியாதிகளுடன் சுற்றித்திரிகின்றோம்.
தெளிவாக ஒன்று புரிந்துகொள்வோம் சித்த மருத்துவம் என்பது நோய் வந்த பிறகு மருந்துகள் எடுத்துக்கொள்வது மட்டும் அல்ல. அது நமது வாழ்க்கை முறை. அதாவது உணவே மருந்துஎன்பது ஆகும். நாம் உண்ணும் உணவும், உணவு முறையையும் பொறுத்து தான் நோய்கள் வரும். 

எத்தனைப் பேருக்கு தெரியும் நம் நாட்டில் பயன்படுத்தும் பல மாத்திரைகள் உலக சுகாதாரத்துறையால் தடை செய்யப்பட்ட ஒன்று என்று? ஆங்கில மருத்துவத்தைக் குறை கூறவில்லை. அறுவைசிகிச்சைக்கு இப்பொது அவர்கள் தான் ஒரே வழி. அனால் நம் நடை முறை வாழ்க்கையில் வரும் பல நோய்கள் சித்த உணுவு முறையைப் பின்பற்றி வந்தாலே நமக்கு எதுவும் வராது.

கடுக்காய் ” பற்றி ஆராய்ந்து பாருங்கள். கடுக்காய் பொடியும் , நெல்லிக்கனியும் உண்டால், நோய்கள் நம் பக்கமே வராது.

ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால், பூநெய்க்கும் ஒரு காலம் வரும்” –
“சிறு வயதில் நெய்யும், முதுமையில் தேனும் உண்டால், உடல்நலம் காக்கப்படும் என்பதே பொருள். உடல் நலத்தைக் காக்கும் பல அருமையான வழிகள் நம் நூற்களில் உள்ளது.1f2c8946-8c67-4b06-81ac-bb9d5c198a08

எப்படி உடல் நலத்தைக் காப்பது என்பதை அறியத்தவறிவிட்டால் ஆயிரம் பட்டங்கள் பெற்று என்ன பயன்? 

பெட்ரோலை இறக்குமதி செய்வதில் ஒரு பொருள் இருக்கிறது. அனால் நிலத்தை அழிக்கும் பொருட்களையும், பதப்படுத்திய உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்து நம்முடைய சிறப்பம்சங்களை அழிப்பது நமது சுய அறிவுக்கான ஒரு கேள்விக்குறி.

இப்படியே விட்டுக்கொன்டே இருந்தால், ஒரு நாள் நம் நாடு முழுவதும் கட்டிடங்கள் மட்டுமே இருக்கும். பிற நாடுகள் வளமுடன் விவசாயம் செய்து நமக்கு இறக்குமதி செய்வார்கள். நாம் 130 கோடிகள் அல்லவா. அவன் உணவை ஏற்றுமதி செய்தே வல்லரசாகிவிடுவான். நமோ உணவுப் பொருட்கள் மட்டும் அல்ல, அனைத்து வகையான பொருட்களும் இறக்குமதி செய்து அதிக விலையுடன் வாங்குவோம். நோய்கள் மட்டுமே மிஞ்சும்.

இட்டலி அழியாது. அனால், அரிசியும், அரிசி மாவும் அதிக வேலையுடன் விற்கப்படும்.
விலைவாசி அதிகரிப்பால், தெருவோராக கடைகளும், பாரம்பரிய உணவகங்களும் அழிந்து விடும்.
வசதி உள்ளவன் மட்டுமே அனைத்தும் சாப்பிட முடியும் என்ற நிலை வரும்.

.bd3d41fe-13bd-4d11-899c-01a274470a30

ஏறுதழுவுதலை( சல்லிக்கட்டு) அழிப்பதே வெளிநாட்டு மாடுகளை உள்ளே நுழையச்செய்வதற்காகத்தான்.
அந்த மாடுகளுக்கான உணவுப் பொருட்களையும் அவர்களிடத்தே வாங்க வேண்டும். அவர்களது வர்த்தகம் நன்றாக செழிக்கும். நமக்கு நோய்கள் வரும். நம்முடைய கம்பீரமான மாடுகளை வெறும் புகைப்படத்தில் மட்டுமே காண முடியும்.

கோழிச்ச சண்டையை அழித்துவிட்டார்கள். இப்பொது அதிக சதையும் கொழுப்பும் உடைய கலப்பின பிராய்லர் கோழிதான் உண்ணுகின்றோம். மருந்துகள் கொடுத்து சதையை வளர்க்கும் கோழிகள் அவை. அதுமட்டுமல்லாது, ஊசி போட்டு முட்டையை வரவைக்கின்றோம். இதன் விளைவுகளை பற்றி அனைவருக்கும் தெரியும். பல்வேறு விதமான இயக்குநீர் குறைபாடுகள், கொழுப்பு ஏற்றம் மற்றும் பிற!

எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், எதை வேண்டுமானாலும் உண்ணலாம் என்பதில் தவறில்லை.
ஆனால், நம்மிடம் இருக்கும் சிறந்த பொருட்களை ஆதரிக்காமல், மாயைகளை காட்டி பாதிப்பைத் தரும் பொருட்களை உள்ளெ அனுமதிப்பது தான் சிந்திக்க வேண்டிய ஒன்று.

எதற்கு அத்தியாவசியம் இருக்கிறதோ/ஏற்படுத்துகிறோமோ, அது மட்டுமே வாழும் என்பதை நினைவில் கொள்வோம்.
நம்முடைய பாரம்பரியப் பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே அவைகள் காப்பாற்றப் படும் 9469d9fc-1203-4a59-b9fc-9c605aad6b0e

நினைவில் கொள்வோம், நமது நாகரிகத்திற்கு உணவும் ஆடைகளும் கொடுத்த இயற்கையை மரம் வெட்டி, விவசாயம் அழித்து அதை நிர்வாணப் படுத்திக்கொண்டிருக்கின்றோம்.

காற்றுள்ள பொத்தியே தூற்றிக்கொள்ளவேண்டும். பிறகு நம் சந்ததி வருத்தப்படும் போது எதுவும் திரும்பக் கிடைக்காது.

உங்களுக்குத் தெரிந்த எவைகளாவது இப்போது அழியும் நிலையில் இருந்தால், நம் விழிப்புணர்வுக்காக அதை இங்கு பகிருங்கள் உங்கள் கருத்துகளுடன்.!

– சமரசம் 

மறைந்து கொண்டிருப்பவைகள் வெளிநாட்டுத்  தாக்கங்கள் 
கடலை எண்ணெய், நல்லெண்ணெய் சூரியகாந்தி எண்ணெய்
நாட்டுக்க்கொழி பிராய்லர் கோழி
நாட்டுமாடு(காங்கேயம் ) சீமைப் பசு
உலோகப் பொருட்கள் பிளசுட்டிக் பொருட்கள்
இயற்கை குளிர்சாதனங்கள் பெப்சி முதலியவைகள்
இயற்கை உரங்கள் வேதியல் உரங்கள்
மஞ்சள் துணிப்பை பாலிதீன் பைகள்
தின்பண்டங்கள் சாகுலட்டுகள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *