ஆயிரம் அடி, திட்டு வாங்கினாலும் எல்லோருக்கும் பள்ளிப் பருவம் தான்சிறந்த பருவம். பலர் நினைத்து பார்ப்பதில்லை. நினைத்துப் பார்த்தால் ஆயிரம் வசதிகள் இருக்கும் இக்காலத்தை விட அக்காலம் சிறந்ததாகத் தோன்றும். வாருங்கள் கொஞ்சம் அவற்றை சுவைத்துப்பார்ப்போம் !!

அப்போ நாங்க வாடகை வீட்ல இருந்தோம். சுற்றியும் எங்களைப்போல் பலர். பேசுவதற்கும், விளையாடுவதற்கும் வயதிற்கு ஏற்றார் போல் கூட்டம் கூட்டமாக திரிவோம்.

மண்ணெண்ணெய் அடுப்பு தான் அப்போ. அதை வைத்தே பல உணவுகள் செய்து கொடுப்பாங்க அம்மா. இன்று எத்தனைப் பேர் அதைப் பார்த்திருப்பார்கள் என தெரியல. அப்போலாம் ரேசன் கடைல போயிட்டு மண்ணெண்ணெய் வாங்கி வருவாங்க. விளக்கு கூட ஒரு கண்ணாடி பாட்டிலில் மூடியில் திரி சொருகி மண்ணெண்ணெய் மூலம்தான் எரியும். கரண்ட் கட் ஆச்சுன்னா எங்களை போல பசங்களுக்கு அப்போதான் தீபாவளி. எல்லோரும் வெளிய வந்து பேசுவாங்க, புத்தகத்தை தூக்கி வச்சுட்டு நாங்களும் நிம்மதியாகிடுவோம். இருளில் வெளிச்சத்தை கண்ட அருமையான காலம் அது. அனைத்தும் நம் பார்வையில் தான இருக்குது. பலருக்கு அப்போ அவ்ளோ வசதி இல்ல. ஆனா கலகலவென்று இருந்தாங்க. நாங்கதான் கொஞ்சம் பள்ளிக்கு போகும்போது சினுங்கிகிட்டு போவோம்.

பண்டிகைகளுக்கெல்லாம் அம்மாக்கள் கும்பல் கும்பலாக கூடிசேர்ந்து ஒவ்வொரு வீட்டிற்கும் பலகாரம் செய்வாங்க. இப்போ எதோ கடமைக்குனு இனிப்புகளை கடைல வாங்கி பிற வீட்டுக்குத் தராங்க (மத்தவங்க தரும்போது ஒரு கடமைக்கு நாமளும் தரணுமேனு). அப்போ இருந்த பண்டிகைக் கொண்டாட்டத்திற்கும், இப்போ கொண்டாடுகிற முறைக்கும் பல்வேறு வித்தியாசம் தெரியுது.

இப்போ ஓவ்வொரு வீட்லயும் குளிர் சாதனப் பெட்டி ஒரு அவசியப்பொருளா இருக்குது. அப்போல்லாம் எதோ ஒரு வீட்ல தான் இருக்கும். அம்மா எலும்மிச்சம் சூசு செய்யணும்னா ஒரு டாக்டர் வீட்ல போயிட்டு ஐசு வாங்கி வர சொல்வாங்க. ஒரு சில்வர் டப்பால கேட்டு வாங்கி வருவேன். ஐசு கட்டில எந்த சுவையும் இருக்காது. ஆனா, அதை வாங்கி வரும்போது சில கட்டிகளை எடுத்து வாயில போட்டுப்பேன். அவ்வளவு நல்லா இருக்கும் சுவையே இல்லனாலும். அப்போ பல முறை நினைத்ததுண்டு நம் வீட்லலாம் அது மாதிரி குளிர்சாதனப்பெட்டி வாங்குவோமா என்று. என்னோட பெரிய ஆசைகள்ல ஐசு கட்டிகளும் ஒரு பெரிய பங்கு வச்சிருந்தன.

   

அப்புறம் ஐசு வண்டி வரும்போது டிங் டிங் என்ற ஒலி எல்லா சிறுவர்களுக்கும் ஏக்கமும் மகிழ்ச்சியும் கொடுக்குற ஒலி. அப்பப்பா அந்த பால் ஐசு, சேமியா ஐசு லாம் இன்னைக்கு எத்தனை ஐசு கிரீமு சாப்பிட்டாலும் வராது. எப்பவாச்சம் குல்பி வண்டி வரும். அது கொஞ்சம் விலையும், சுவையும் அதிகமா இருக்கும். ஆனா என்னத்தான் இருந்தாலும் பால் ஐசு, சேமியா ஐசு குச்சில சாப்பிடறது போல வராதுப்பா.

 

பெப்சி தெரியுமா? குடிக்கிற பெப்சி இல்ல. கலர் தண்ணில இனிப்பைப்போட்டு ஐசு ஆக்கி எங்களை ஏமாத்தி விப்பானுங்க. எங்கள் மனதை கொள்ளை அடிக்கும் பலவற்றில் அதுவும் ஒன்னு. ஆரஞ்சு மிட்டாய் , நாவல்பழம், களாக்காய், தேங்காய் கேக்கு, தேன்மிட்டாய், வத்தல்(குடல்) என எக்கச்சக்கமான திங்குற பொருள் இருந்துச்சு.

கீழே இருக்க இந்த இனிப்புக்கட்டி ( சக்கரக்கட்டினா இதுதான் ) கற்பூரத்துல இனிப்பு கலந்த போல இருக்கும், ஆனா அதுக்கு எவ்ளோ ஆசை, சாப்பிட்றதுக்கு முன்னாடி அத விளையாடிட்டு அதுக்கப்பறம் மனசு வராம சாப்பிட்றதும்.. அட அட அட. நீ போதும் டா, வேற ஆசையே இல்ல அப்போ.

அடுத்து விளையாட்டுக்கு வருவோம். எத்தனை பெரு டயர் வண்டி ஓட்டிருக்கீங்க? நாடு பிடிக்கிற ஆட்டம், கொட்டி புள் விளையாடிருக்கீங்க? நுங்கு வண்டி ?

   

பேப்பர்ல கேமரா செய்ததுண்டா??, கப்பல்,பேப்பர் பூக்கள், ராக்கெட், ??????????

 

பல்வேறு விளையாட்டுகள் பெயர் தெரியவில்லை. படம் பார்த்து மகிழவும்!

 

 

குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டினதுண்டா, 2 ரூபாய்க்கு வாடகை எடுத்து ஒரு மணி நேரம் சைக்கிள் கூட ஓட்டிருக்கோம் நாங்க.

  

டைனமோ போடு லைட்டு ஏறியிற சைக்கிள் தெரியுமா?, அது போல யோசிக்காம விட்டுட்டு இப்போ கரண்டுக்கு இப்போ உலகம் புல்லா அடிச்சிக்கிட்டு இருக்கோம், காத்தையும் கறுப்பாக்கிட்டு சென்னை கொளுத்துது , வெண்டக்கா வெக்குதுனு சொல்லிட்டு திரியுறோம்

TVS 50 வண்டி bajaj வண்டிலாம் அனைவரையும் திரும்பிப்ப் பாக்க வைக்கிற வாகனங்கள் அப்போ.

டிவி பாக்கறது எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சதுதான் .. ஆனா எங்களை போல வாலுங்களிற்கு பேரு போடும்போது வர ‘சண்டைப் பயிற்சி’ டைட்டில் தான் சக்தியை கொடுக்கும். எங்க செட்டு மக்கள் கிட்ட கேட்டு பாருங்க. எத்தனை பேரு இத பார்த்துட்டு தான் படத்தையே பாப்பாங்கன்னு. 🙂

கொள்கேட்டு டப்பா,

கிரிக்கெட் பேட் வச்சு கொடு போட்டு நம்பர் எடுக்கறது. ( நான் விளையாட மாட்டேன்),

கொடுக்காய்ப்பிள்ளி, இலந்தை பழங்கள், வெப்பம் பழம், புளியம் பழம் 

பல பட்டன் இருக்கும் பேனா ஆசைகள், 

கத்திக் கப்பல்

பனைமர விசிறி 🙁 நம்ம அடையாளமே அழிந்து போய்ட்டுருக்கு இப்போ பனைமரம் இல்லாம 🙁

 

இந்த விளையாட்டு பேரு தெர்ல.. கமெண்ட்ல சொன்னீங்கன்னா பலருக்கு உதவும் .

  

சொந்த ஊருக்குப் போனா கல்லுல செய்த அடுப்பு, மண் அடுப்பு, கயிறு கட்டில் பார்த்த நினைவுகள்.

அம்மி கல்லுல , உரைக்கல்லுல அரைச்சு நசுக்கரது உண்மையாவே தனி சுவை இருப்பது போல் எனக்கு தோணுதுங்க? உண்மைனா கமெண்ட்ல சொல்லுங்க.

நடராசு டப்பாவை பள்ள கடிச்சு திறக்கறதா பார்த்த இப்போதைய பிள்ளைங்க ச்சினு சொல்லுவாங்க. உங்களுக்கு எங்க தெரிய போகுது அதெல்லாம்.

இந்த பென்சில்காக தவமே இருக்கலாம் . 🙁

விடுமுறை முடியும்போது பல வருத்தங்கள் இருக்கும். ஆனா அப்போ நமக்கு , நடூல இருக்க ஒரு குட்டி மகிழ்ச்சியான செயல் நோட்டு புத்தங்கங்களுக்கு உரை போடுவதுதான். எல்லோரும் மரக்கலர் உரை போடா மாட்டாங்க. காசு கம்மியா இருக்க குடும்பத்துல செய்தித்தாள் உரை தான். சொல்லப்போனா, செய்தித்தாள் உரை தான் பொன்னாடை. ஒரு தனித்துவமான அழகைக் கொடுக்கும். செய்திதாள்ல துடைப்பங் குச்சியை வளச்சு வச்சி நாங்களே பட்டம் சேட்டு டொய் நூலில் பறக்க விடுவோம் பட்டத்தையும் மனதையும். 

 

மியாமி குசன் செருப்பு நினைவிருக்கிறதா? அவை   உழைச்ச மாதங்கள் கூட இப்போ விளையாதிகமான காலணிகள் உழைக்கர்து இல்ல. 🙁

இது பேரு என்னனென்னவு தெரியல.. சில முறை விளையாடிருக்கேன். இப்போருக்க ஐபேட்க்கு சமமான விளையாட்டுப் பொருள் இது அப்போ 🙂

கீழே இருக்கின்ற படங்கள் நினைவிருக்கிறதா??

 

இந்த சொக்கலேட்டுகள் தான் அப்போ பிரபலமானவை.

 

தத்துவதோடு முடிக்கணும் என்ற கட்டாயத்தில் இதையும் சேர்த்து சொல்கிறேன். அப்போலாம் நாங்க பேருந்தில் பயணிக்கும்போது ரெண்டு புறமும் மரங்கள் இருக்கும்.

 

சில ஊரில் பனை மரங்கள் உயரம் உயரமாக இருக்கும். எத்தனை பெருக்குத் தெரியும் தமிழனின் அடையாளம் பனை மரம் என்று. தமிழ்நாட்டு அரசாங்க மரமும் பனை மரம் தான். அப்படி பனை மரத்துல என்னதான்யா இருக்கு? தென்னை மரம் போல உடனே காய்க்கறதும் இல்ல, காசும் கொடுக்கறது இல்ல. ஆனா என்ன அப்படி இருக்கு ?

?

 

பனை மரம் விவசாய நிலங்கள்ல வச்சா, அது தண்ணிய 50 அடிக்கு அப்படியே தாங்கிப்பிடித்துப் பாதுகாக்கும்.

பனங் கற்கண்டு உண்டால் சர்க்கரை நோய் வராது, உடம்புக்கு குளிர்ச்சியைக்கொடுக்கும்

பனை மரம் மட்டும் தான் வேரில் இருந்து மேலே உள்ள மட்டைகள் வரை அனைத்தும் பயன்படும். ( பனை விசிறி, கட்டு மரம், நீர் காக்கும் பனை வேர் அணைகள், நுங்கு போல் சிறந்த மருத்துவ குணம் கொண்ட பழம் வேறு எதுவும் இல்லை. பதநீர், பல்வேறு தாது உப்புக்கள் கொண்ட அருமையான பானம், கல் போதைக் குடுத்தாலும் பல பயன்கள் இருக்கின்றதாம். போதை வேண்டாம் என்றால் பதநீராகக் குடித்துக்கொள்ளலாம், பனங்கிழங்கு சுவைமிகுந்த கிழங்குகளில் ஒன்று.

பனம்பழம் ஒரு சிறந்த உணவு கூட. உடல் வெட்பத்தை ஏற்படுத்தினாலும் அதன் மூலம் பல ஆற்றல்கள் கிடைக்குமாம் )

அரசாங்கத்தால் இன்று பனை மரங்கள் வேண்டுமென்றே வெட்டப்படுகின்றன . காரணம் வெளிநாட்டு மறந்து கம்பெனிகள் வளரணும்ல நமக்கு நோய்களை கொடுத்துட்டும், உழவையும், நிலங்களையம் அழிச்சுட்டும்.

சரி நண்பர்களே அவ்ளோதான்.. நீங்கள் கண்ட நினைவுகளை மறக்காமல் பகிருங்கள், பல ஆங்கில உச்சரிப்பிற்காகவும், சிறு வயதில் பேசியது போல எழுதியதற்கும் மன்னியுங்கள். காரணம் அந்த நினைவுகளைத் தூண்டிவதற்கே மட்டும் தான் தான்.

என்றும் தமிழ் வாழ்க! வளர்க!

நன்றி!

– சமரசம்

 

33 comments

 1. Super Sam…really brought back memories…Those games were awesome ..navapalam and kodukapuli la.saaputu decade aayiruchu 🙁 …Pad cricket miss pannitaye …and that game is Pacha kuthirai..

  1. நன்றி சேகர். இன்னும் பல மனதில் நினைவுக்கு வருது இப்போ. மயில் இறகை புத்தகத்தில் வைத்து அது உதிருவதைப் பார்த்து உண்மையாகவே குட்டி தான் போடுத்துன்னு நினைத்திருக்கேன். அப்போ நல்ல மழை பொழியும். சேரில் விளையாடுவோம். பொற்காலம் தன் அதெல்லாம். நாமா வாழுற இந்த life styleல எல்லாத்தையும் மறந்தாச்சு… 😢😊

 2. எனக்கு பாதுஷா இனிப்பு பிடித்ததானதற்கு காரணமே ஒரு தீபாவளி சமயம் வீட்டு அருகில் இருந்தவர்கள் ஒன்று கூடி இனிப்பு செய்து மகிழ்ந்து கொண்டாடியதன் பிறகே!!!!

  இனிப்புக்கட்டி மிக மிக பிடித்த ஒன்று.10 பைசாவிற்கு ஒன்று😍😍நாங்கள் சக்கர மிட்டாய் என்போம்.

  இந்நினைவலைகளை தூசி தட்டி எழுப்பிவிட்டீர் தோழா!!!! உங்களுக்கு நன்றி!!!!
  👍👍👍

  1. மகிழ்ச்சியும் நன்றிகளும் தோழி. அப்போ இருந்த சிறப்பே நம்மிடமிருந்து ஒற்றுமை தான். அதனால் தான் கலகல என்று சென்றது நாட்கள். பட்டாம் பூச்சி, தும்பிகள் கூட விளையாடிருக்கீங்களா????😊😊😊💐💐💐💐😊😊😊

 3. The game which you mentioned you are not aware of the name is ”Pachakuthirai”. After reading this, you rekindled all my younger days da Sam. Few more things which I still remember with above things are Shakthiman, Friday night ‘Oliyum Oliyum’, playing cricket with bat made out of coconut leaf, playing with marbles, Gilli, catching Thumbi n Ponvandu and tying them with thread(sounds cruel but they were definitely fun), cricket wwe Trump cards (believe me I too believed undertaker died and reborn many times). Thanks for the post.

  1. முதலில் நன்றியை தெரிவிக்கிறேன் நண்பா பட்டியலை பெரிதாக்கியதற்கு. இப்போ மேலும் பல நினைவுகள் உலா வருது இந்த பதிவிற்கு பிறகு. சிறிய சிறிய செயல்களாக இருந்தாலும், இவ்வளவு தாக்கத்தை கொடுக்குது நினைக்கும் போது. ஏரோபிலைன் க்கு டாட்டா காட்டியது, மரம் பிடிக்கிற விளையாட்டு என எவ்வளவோ எளிதா மகிழ்ச்சியை பெற்றிருந்தோம். இன்னைக்கு எதுமே போதல..

 4. அருமை சமரசம், அதிலும் பனம் பழம் சுட்டு சாப்பிட்டதெல்லாம் மகிழ்ச்சியான அனுபவங்கள். மீண்டும் குழந்தையாக மாற ஆசையாக உள்ளது. விளக்கத்திற்கு ஏற்ற படங்கள்.

  1. ஆம் விமலி. அதெல்லாம் இப்போ இல்ல. அருமையான தின்பண்டங்கள், மகிழ்ச்சியான விளையாட்டுகள். கோவைக்காய் வெளியில பறித்து சாப்பிட்டது எல்லாம் இப்போ கிடைக்காது..

 5. சிறப்பான கட்டுரை! நீ குறிப்பிட்டதில் நான் விளையாடாத விளையாட்டே இல்லை. நன்றி! அழகான நினைவுகள்! நீ கேட்ட விளையாட்டை நாங்க “பச்சை குதிரை தாண்டுதல்” என்று அழைப்போம்.

  1. நன்றி தோழி. எல்லா விளையாட்டுகளுமா?? அருமை. இப்போ எல்லாம் ipadல விளையாடுறாங்க.. ஓடி குதிச்சு தாவுறதுல வர மகிழ்ச்சி எப்படி கிடைக்கும்?

 6. Super da Sam 👌 idhula solli irukkira neraiya saapidra items lam ippo illave illa. Neraiya games ippo neraiya perukku theriyadhu 🙁 Enna than ippo kaasu panam nu ellam irundhaalum, chinna vayasula 1-2 rs ku appa Amma kitta kenji vaangi adhula indha snacks items lam vaangi vilayadiya sandhosame thani 👍 Thanks for the article. Thanks for these pictures 🙏🙏

  1. ஆமாம் டா நண்பா.. இத எழுதிட்டு படம் ஒன்னு ஒன்னும் தேடும்போது ரொம்ப வருத்தம் கலந்த ஆசைகள் வந்துடுச்சு. எவ்ளோ எளிதா இருந்தது நமது ஆசைகள்!? எவ்ளோ அருமையான சாப்பாடு அப்போலாம். 50 பைசாவிற்கு வாங்கிய வத்தல் பக்கெட்டு எவ்ளோ சுவை, எவ்ளோ சந்தோசம்..

   விளையாட்டு சொல்லவே தேவை இல்லை.. இருக்காத வச்சு என்ன வேணுமானாலும் விளையாடலாம்.

 7. Thank you for nostalgia. Human memories are weak, languages help us in memory formation. Perhaps the larger time we spent with humanities (language, art etc.) helped us create a bond with the items mentioned in the article, I wonder whether the present generation who is largely devoid of humanities based education & that memory is just a reminder away; would have affinities towards ‘cheap thrills’ as we 90’s kids had. In fact, I presume there are larger chances of false memories with the current Internet based generation.

  Curious to see ‘compromise’ as signature, wouldn’t ‘peace’ be the apt translation for samarasam? Though Google says the former as well.

  1. Thanks Abishek! Those memories are very important for us (our generation) to remind how to live among people rather than to live with machine in leisure time. We have already reduced talking with people even lots of communication devices are made.
   Not sure it is possible, but i hope that it made us to think including myself. Thanks again for reading da.

 8. Very nice Article Sam.. first i want to thank you for taking effort to write such a wonderful article. It made me very happy and brought all my school memories while reading it. I played almost every game you mentioned and ate almost everything that you pointed out. I really enjoyed the point that you talked about Deepavali, as you said it is totally changed now, no more sweet preparation in home, and not much fire works, we used have a competition in our street who cracked more crackers, we check papers from everyone home who had more infornt of house, but now people started feeling that not cracking crackers is style, they just want to sit back and watch TV progs. Worst part is even in my village kids doesn’t wants to play these games anymore , whenever I visit my home town all they wanted to play is 🏏, no one is interested in playing pamparam , kittipul, tire game, Koli Kundu. Seriosuly I really want to go back to that life it was full fun.. I enjoyed every words of your article .. Keep writing more Sam..

  1. Thanks for reading and for your writing. you have just added more scent to this blog by your emotions. Before I start writing this blog, i was normal. But later, i started feeling the same and got emotional da. We were happy and together when we had more interactions with people . We really had care from everyone from the society and with less of everything we were satisfied.

   Our generation’s games are really awesome da( eventhough i dint play everything), we were active, laughed well, wounded and came back always.

   But u know, we were like these and we now got changed and adopting to western without knowing ourselves.

   This whole week,I am thinking everything we did and imagining how beautiful those times was. we should really protected iur nativity and place. lets see how it goes. Thanks for reading da !

 9. Migavum arumaiya irunthathu!! Entha mathri anubavam ellam eppo irukura kozhaithangaluku kidaikalyenu varuhama iruku.. 🙁 antha vagaiyil namma kuduthu vachavanga.. 🙂

  1. ஆமாம் தோழி, இதெல்லாம் அவர்கள் அறிவாங்களான்னு கூட தெரியல. எல்லோரும் ஒரே இடத்துல இருந்து விளையாடனும் னு ஆச போடுறாங்க. மழை, சேறு, வெயில் லாம் பட்ட தான உடலும் மனதும் நல்ல இருக்கும். நாம, எல்லாத்தையும் தேய்ஞ்சிகிட்டே அதை விட்டுட்டு விலகி விட்டோம். முடிந்தவரை இனிமேலாச்சம் இருக்கறத காப்பாத்தணும். படித்ததற்கு நன்றி தோழி!

  1. நன்றி முகிலா!

   இந்த பதிவு அழகான நினைவுகளை நினைவூட்டியிருக்கும் என கருதுகிறேன்.

  1. அமாம் மா. அருமையான காலம் அதெல்லாம். விளையாட்டு, உணவு மட்டும் இல்லாம, எல்லாமே மகிழிய, ஆரோக்கியமான இடங்கள்ங்க இருந்துச்சு.

   எதிர்பாராத அனுப்பு, எதுவும் நினைக்காத சிரிப்பு எல்லாம் அப்போதைய வாழ்க்கை முறையால் தான் கிடைச்சுது .

   நன்றிமா!

 10. வாழ்த்துக்கள் சமரசம் . உன்னோட இந்த நினைவுகள் எங்களை சின்ன வயசுக்கே கூட்டிட்டு போகுது.. சித்தி புள்ளைகளோட எக்ஸாம் லீவ்க்கு ஊருக்கு போயி மண்
  சாமான் செஞ்சு விளையாடுவோம். ஆயா வீட்டு தோட்டத்துல முந்திரி காய் பறித்து சாப்பிடுவோம். கல் சோபால உக்காந்து ஆயா செஞ்சு தர்ற வெல்ல தோசை , அதிரசம் எல்லாம் சாப்பிடுவோம். வெளி திண்ணைல எல்லாரும் வரிசையா
  படுத்து நிலா நட்சத்திரம்
  பார்த்துட்டே
  தூங்குவோம். தனி ரூம் தனித்தனி போர்வை எல்லாம் கிடையாது. மோட்டார்
  கேணியில் போயி குளிக்க அப்போல்லாம் அவ்ளோ ஆசையா இருக்கும்.

  1. நீ சொல்வதெல்லாம் கேட்கும்போது இன்னும் பழைய நினைவுகளுக்கு செல்கிறேன். இப்போல்லாம் வீட்டுக்குள்ளயே கம்ப்யூட்டர் கூட தான் விளையாடுறாங்க எல்லோரும். சூரிய வெளிச்சம், நிலா வெளிச்சம் லாம் எங்க பாக்குறாங்க! எத குடும்ப நிகழுகளுக்கு தான் சொந்தகார பசங்கள்லாம் பாக்க முடியுது இப்போ. வரும் தலைமுறை இன்னும் எவ்வளவு காணாம போக போறாங்கன்னு தெரியலையே?

 11. Well done Sam! Special Appreciation for the pictures. I went back to my childhood and didn’t remember anything else for past 20 mins. This topics mesmerized me. One thing I remember is the climate. We got better rain than now and I think we didn’t bother much getting wet in rain. Now a days all parents restrict their kids. When these kids grow up definitely they don’t feel any attachment with the nature.

  1. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிங்க சங்கீதா. நீங்கள் சொல்வது போல இயற்கைக்கும் நமக்கும் இருந்தா தொடர்பு குறைஞ்சிக்கிட்டு இருக்கு. அதை வளர்த்து இயற்கையோடு சேர்ந்து வாழனும்.

 12. சூப்பர் சாம்! பனமரம் பத்தி சுவையான தகவல் எடுத்து சொன்னிர்.

  இயற்கை தான் நம் கண் முன்னே தெரியும் தெய்வம். வாழ்க பூமி! ஒழிக தீய எண்ணங்களும் தீய சக்திகளும்.

  1. ஆமாம்ங்க நண்பரே. இயற்கையை, நாம தொந்திரவு செய்யலைன்னா, அது நமக்கு மேலும் பல்லாயிரம் பலன்களைக் கொடுக்கும்.
   இனிமேலாவது பொறுப்புகளோடு இயற்கையை மீட்டும் வழியைச் செய்வோம்.உங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி! பலர் இதைப் பார்த்து பின்பற்ற வேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *