இயற்கை:
புவி! ஓர் மிகச்சிறந்த கிரகம்! நீர் மண்டலம், நில மண்டலம், காற்று மண்டலம் என அழகாக அனைத்து உயிர்களுக்கும் ஏற்றார் போல் தன்னை வடிவமைத்திருக்கின்றது!

இன்று நம் மனித இனம், தன் தேவைக்காக இயற்கையை சீரழித்துக்கொண்டிருக்கிறது!

— மரம் —

பிராண வாயுவை தருகின்றது
மழையை தருகின்றது
நிலத்தை குளிர வைக்கின்றது
வயிற்றுப் பசியை போக்கும் உணவை தருகின்றது!
தாகத்தை நீக்குகின்றது

 

tamilagri

நீர் ஒன்றே அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான ஒரு பொருள்!
அதைக்காக்கின்ற மரங்களையும், இயற்கையையும், விவசாயத்தையும் இன்று உலகின் கொடிய மிருகமான நாம் அழித்துக்கொண்டிருகிறோம். அதன் விளைவை கண்டு நாம் இப்பொழுது பயப்படவில்லை. நமது சந்ததி அனைத்தும் ஒரு நாள் வாடி, வதைந்து பல்வேறு நோய்களோடு வாழ்வார்கள்.

இன்று நமது அனைத்து கவலைகளும் பணம், ஆடம்பரம், ஆசை, மற்றவர்களின் வளர்ச்சியில் பொறமை, வெளிநாட்டு மோகம் மற்றும் அனைத்து தீய செயல்களிலும் தான் சென்று கொண்டிருகிறது! காரணம் நமது அலட்சியம்! அலட்சியம்! அலட்சியம்! இயற்கையின் மேல்!

இதனால், புவி வெட்பம், அதிகரித்துக்கொண்டிருக்கிறது; பருவநிலை மாறிக்கொண்டிருக்கிறது; உலகின், பல்வேறு உயிர்கள் அழிந்து கொண்டிருக்கிறது.

விவசாயம்:

காடுகளை அழித்தோம்;
பயன் தரும் தாவர இனங்களை அழித்தோம்;
அங்குள்ள விலங்குகளை அழித்தோம்;

இன்று விவசாயிகளை அழித்துக்கொண்டிருக்கிறோம்.

அவர்களுக்கு போதியமான மானியம் கொடுக்காமல், விற்பவனுக்கும், ஏற்றுமதி செய்பவனுக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறோம்!

பாவம் விவசாயி ! அவன் கேள்வி கேட்டால் அவனுக்கு உதவ மனிதம் இன்று இல்லை!

ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நிதானமாக பல்வேறு படிகளை கொண்டது விவசாய முறை!
பயிர்களுக்கு தண்ணீர் பிரச்சனை, நிலத்திற்கு நீர், உரம், கால்நடைகளுக்கு உணவு, பராமரிப்பு, இவை போக கடன் வாங்கி, நிலத்தை உழுது, பயிர்களை தன் உயிராய் பாதுகாத்து கடைசியில் விற்பனை செய்யும்போது “விவசாயிக்கு 5% , விற்பவனுக்கோ 95%.
கடைசியில், கடன் வாங்கிய பணம் கூட திரும்ப கிடைக்காத சூழ்நிலையில் நிற்கிறான் நமது விவசாயி!

எதிர்காலத்தில், பெருநிறுவனங்கள் விவசாயத்தை எடுத்துக்கொள்ள போகிறது. பெருநிறுவனங்கள் குறிகிய காலத்தில் பயிர் விளைக்கும் முறையை கையாள்வார்கள்!
இதன் விளைவு, தரமற்ற பயிர்கள் உற்பத்தியாகும். எதிர்ப்பு சக்தி அற்ற பயிர்கள் தான் நமக்கு கிடைக்கும். நோயோடு வாழ்கைத் தொடரும்.

உடனே பெருநிறுவனங்கள், மருந்து தொழிற்சாலைகளை தொடங்குவார்கள். அதாவது நோய்களையும் கொடுத்து, அதிக விலையுள்ள மருந்துகளையும் நம்மை வாங்க வைத்து அவன் தொழிலை பெருக செய்ய போகிறார்கள். நாமோ அனைத்தையும் மறந்து நோயுடன், தரமில்லாத உணவுகளையும் அதிக விலை கொடுத்து வாங்குவோம்!

ஒரு நாள், நம் ஊர் மாட்டுப்பாலிற்கு பதிலாக வெளிநாட்டு நிறுவங்களின் பாலையும் , செயற்கை பாலையும் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும்.
விவசாயி 20 ரூபாய்க்கு நமக்கு விளைவித்து கொடுத்த ஒரு கிலோ தானியம் , கூடிய விரைவில் 2000 ருபாய்க்கு வாங்க நேரிடும்!.
அப்போதும் நம் விவசாயியின் அருமை நாம் அறியமாட்டோம்! நம்மை நாமே ஏமாற்றி ஒரு வாழ்கை வாழ்வோம்!
நம் விவசாயிக்காக போராட மாட்டோம், அது நமக்கான போராட்டம் என்று உணராமல்!

farmer1 + PTI

இதை மாற்ற வேண்டும்.

விவசாயிகளுக்கு சரியான மானியம் கிடைக்க செய்ய வேண்டும்; இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்;

நேரடி கொள்முதலுக்கு வழிகளை ஏற்படுத்திக்கொடுத்தால், சரியான மானியம் அனைவருக்கும் சேரும்.
சிறுதொழில் புரிவோரையும் ஆதரிப்போம்; வீதிகளில் உள்ள விற்பனை கடைகளில், பொருட்களை வாங்குவோம்!
எந்த தொழில் புரிவோரும், விவசாயத்தை ஒரு பகுதியாகச் செய்ய முடியும். அது நமக்கு இயற்கையுடன் ஒரு தொடர்பை கொடுக்கும்!

நாமும் விவசாயம் செய்யலாம்!

செய்வோருக்கும் உதவலாம்!

வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம்! நகரங்களில் வீட்டின் அருகே இடம் இல்லை என்றால், கிடைக்கும் இடத்தில் மரம் நடுவோம்;
பறவைகளுக்கு ஒரு சிறு தொட்டியில், தண்ணீர் வைக்கலாம்! அப்பறவைகளின் ஒலி, நமக்கு நன்மையைத் தரும்!

 

1. நாம் நேரடியாக உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்கி விதைத்தவர்களுக்கு உதவலாம். பெருநிறுவனங்களில் உள்ள பதப்படுத்தப்பட்ட, பலநாள் கெடாத உணவுகளை தவிர்த்து, வீதிகளில் உள்ள சிறு கடைகளை ஆதரித்தால், அவர்களும் பயன் பெறுவார்கள்; நாமும், உடல்நலத்தை பேணலாம்.
2. நுங்கு, பனங்கிழங்கு, மரவள்ளி, கம்பு, கேழ்வரகு போன்ற மிக சத்தான உணவுப் பொருட்களை ஆதரித்தால், நாம் நமது உடல்நலத்தையும் பாதுகாக்க முடியும், உழவர்களுக்கும் பயனளிக்க முடியும்.
3. அதிக விலை கொடுத்து, உடலுக்கு தேவை இல்லாத அயல் நாட்டு உணவுகளை தவிர்த்தால், நம் நாட்டு உணவகங்களும் வளரும். நமது உடல் நலமும் ஆரோக்கியம் பெறும்.
4. பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, நமது ஊர் துணிப்பைகளை ஆதரிக்கலாம்; இதன் மூலம் நமது இயற்கை காப்பாற்றப்படும்.
5. வீட்டிற்கு ஒரு மரம் வைக்க இயலாவிட்டாலும், சிறு துளசி போன்ற செடிகளை வளர்க்க முடியும். முடிந்தவரை மரம் நடுவோம்!
6. நாம் நமது நாட்டுப் பொருட்களை ஆதரித்தால், விவசாயம் மட்டும் அல்ல நமது பல தொழில்களை பெருகச் செய்ய முடியும்! 

இன்று பலருக்கு தெரியாது மண் பானையின் தண்ணீர்க்கு ஒரு தனிச் சுவை உண்டு, வேப்பமர காற்றிற்கு பல சக்திகள் உண்டு என்று! 

மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள், நிலம், நீர் அனைத்தையும் பாதுகாத்தால் தான், நாம் நமது பகுத்தறிவுக்கு கொடுக்கின்ற மரியாதை! அதுதான் மனிதம். இதை நிறைவேற்ற அனைவரின் ஒற்றுமையும், தகுதியான தலைவர்களும், சமத்துவமும், முக்கியமாக விழிப்புணர்வும் நம் அனைவர்க்கும் தேவை!

அலட்சியம் ஒன்றே அனைத்து அழிவிற்கும் முதற்படி!

இதைப் புரிந்துகொண்டு, விவசாயத்தையும், விவசாயியையும், நமது இயற்கையையும் பாதுகாக்கும் வழியை செய்வோம்! ஒன்றாகச் சேர்ந்து போராடுவோம்!

உங்கள் கருத்துகளை மறவாமல் பகிருங்கள். எப்படி இதை சரி செய்வது என்பதை கலந்துரைப்போம்!

நன்றி,
– விவசாயியின் மகன்

15 comments

 1. Very well written, could understand the pain felt by you in your words. I share the same.
  Humans are steadfast against the nature and even now when evidence prove it, people are politicing it for their personal gains.

  Injustice to farmers is an inhumane tendency spread through out the country. Your concerns and concerns are valid and I would prefer if you can have dealt with more detail on the plausible solutions as well.

  While I do agree that corporate giants are equally responsible for devastation of farm lands and water sources, I’m slowly starting to see a different trend via new agri-startups like BigBasket which seems to source their vegetables direct from from organic growers; have to fact check the same though.

  I feel if there’s more agri based startups focussed on organic farming, we could create a difference to start with. Would be eager to listen to your feedback .

  Please keep on writing.

  1. Thanks Abishek for your comments. I should have discussed more on how to solve this issue as you said. Now I would like to use this discussion to find a solution from all readers. Its good to hear that some agri startups are directly purchasing the vegetables/grains from farmers.
   1. We can also start purchasing from them directly, street shops, farmers market(உழவர் சந்தை ) rather than foreign imported shops/corporate giants.
   2. We can start eating palm fruit (நுங்கு), இளநீர், பனங்கிழங்கு which we can get them from local markets or bus stand shops. These are all very good for our health too.

   3. Its time to avoid pizza, kfc likely foods to retain our health and also to stop other countries to kill our nation’s own business

   Please share your thoughts too on the same. Thanks for reading & writing!

 2. Hearty wish to you SAMARASAM for your first internet short calligraphy on “அழிவின் விளிம்பில் விவசாயம்” .
  Very much need cognizance writing for the present situation. It’s nice go through each and every words.
  I can feel the core of the theme and its nice but it is so raw in taste. Wish it to be a decorated serving (I agree, everything is not possible in first attempt. But you have those potentials SAMARASAM).
  With much expectation waiting for your new one.
  (wished to comment in Tamil. However lack of knowledge / technology. Kindly ignore.)

  1. Thanks for your kind words John! I will try to improve my writing and please feel free to discuss/suggest on any topic posted. Thanks for reading!

 3. With an agriculture background, I always believe in Homesteading and wanted to grow everything myself and lead a Self Sufficient Life. The only reason why the growth of agriculture is backwards is due to lot of middle men interventions. As you said only if a farmer can sell everything which he grown without any of these IDAI THARAGARS, there is a possibility he can reap the real harvest of all his efforts. Definitely there will be a day when every human will realize that he cannot eat money. At that point he will realize only farmers are the real rich people.

  1. True Premkumar. People are having a thought that agriculture is a low level job. Due to this, no farmer son/daughter are ready to take up agriculture. And farmers do not want their next generation to do agriculture by seeing the various struggles of a farmer. The day should come to pay for their efforts. Thanks for reading & writing!

 4. I share your pain and concerns on everyday of my life. Its good to know that our generation think about this. As we studied is our earlier age, agriculture is our backbone. Trust me, I know the value of backbone. :'(

  Lets all take a oath to show our concerns in action. Lets all do and be an inspiration. Good start. Way to go!

 5. விவசாயிகள்…
  கண்ணைத் திறந்து கொண்டே போய் பசுமை புரட்டுக் குழியில் விழுந்தவர்கள்
  மானியம்… ரசாயன உரத்துக்கா?
  நவீனத்தை பேராசைக்குப் பயன்படுத்தாத நிலையில் நிலையாய் நின்றால்…
  தொழுது வந்து வாசலில் நிற்கும் உலகம்

  1. ஆம், உண்மைதான். பேராசைப்பட்டுத்தான் தேவையற்ற செலவுகளை செய்து நிலத்தை பழுதாக்கி விட்டோம், என்று ரசாயன உரத்தை வாங்கினோமோ, அன்றே நம் தலையில் மண்ணை போட்டுகொண்டோம்.
   ரசாயன உரம், அதிக விளைச்சல் குடுக்கும், குறுகிய காலத்தில் விளையும் என்று ஆசைப்பட்டு, ரசாயனத் தொழிலை வலப்படுத்தியாச்சு!

   இன்று மண் கெட்டுவிட்டது, ரசாயனம் இல்லையேல் விளைச்சல் இல்லை. மீண்டும் அவனிடமே சென்று கொண்டிருக்கிறோம்.
   இயற்கை உரத்திற்கு பெரும் ஆதரவு இல்லை இன்றும்.
   அனால், சில இடங்களில் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. மாற்றத்தை எப்போதும் போல் எதிர்ப்பார்ப்போம்!

   உங்கள் கருத்திற்கு நன்றி, கவிதா!

 6. சமரசம், மிக அருமையாக ஏழுதப்பட்டள்ளது. விவசாயம் தான் நாம் முதன் முதலில் கற்ற தொழில். அதுவே முதன்மையானதும் கூட. இயற்கை தாயை மதித்தும், போற்றும் ஓரே மகத்தான தொழில். என்னவோ தெரியவல்லை, ஆனால் இன்றைய தலைமுறை உறுப்படுவது போல் தெரியவில்லை. நாட்டையும் இயற்கை வளத்தையும் மெதுவாக அழிக்கப்பட்டு வருகின்றது. ஏப்பொழுது நாம் இயற்கை தான் நம் கடவுள் என்று உணர்கிறோமோ அன்று தான் உன்மையான மாற்றம் நடக்கும். ஹாலிவுட்டில் மக்களை அழிப்பதாகக் காட்டப்படும் ஏலியன்ஸ் வேறு யாரும் இல்லை. அது நாமே தான். இந்த நிலை நீடித்தால் 2150க்கு மேல் இந்த பூமியில் யாரும் இருக்க மாட்டோம். அப்பொளுது ஆவது பூமித் தாய் நம்மதியாக இருக்க கூடும். என்றும் வாழ்க நம் பூமி, வளர்க மக்களின் அறிவும் பொறப்பும்.

  1. ஆம் நண்பரே(பிரியாணி பிரியன்).

   மனிதன் தான் இயற்கைக்கு மிகிப்பெரிய ஆபத்து. எப்போது இதை உணரப்போகிறோம் என்று தெரியவில்லை.
   நம்முடைய வளர்ச்சி அடைந்த விஞ்ஞானத்தை சரியான இடத்தில மட்டும் பயன்படுத்தாமல், அழிவிற்கு பயன்படுத்துகிறோம். அதனால் தான் இவ்வளவு மாசு, இவ்வளவு நோய்கள் மற்றும் பல உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கிறது.

   முடிந்தவரை, இயற்கையையையும் , விவசாயத்தையும் இயற்கை வழிகள் மூலமாக சரி செய்ய முயற்சிப்போம்.
   பல விவசாயிகள் ஏழைகளாய் இருப்பதால், அவர்களை நாம் மதிபதில்லை. வயதிருக்கும் சரியான உழைப்பிற்கும் மரியாதை கொடுப்போம்.
   அனைத்து தொழில்களும் சிறப்பு வாய்ந்தவைகளே! அனைவரையும் மதிப்போம், அவர்கள உடை, வசதியைக்காணாமல்.

   சொல்லப்போனால், விவசாயிகள்தான் நாம் அதிகம் மதிக்கக்கூடியவர்கள்! அவர்களிடம் நேரடியாக பொருட்கள் வாங்க முயற்சிப்போம்!
   மரம், செடி கொடிகள் வளர்த்து இயற்கையைக் காப்போம்!

   உங்கள் அன்பான கருத்திற்கு மிகவும் நன்றி, பிரியாணி பிரியரே!

 7. Very well written Sam. I can clearly see through your concern, as I also hail from agriculture family. lets shop local and start using Indian products. I know, we cannot fully change, but even baby steps are good. Keep writing.. :’-) P.S- I feel very bad that I cannot write it in tamil, as my old phone wont support. 🙂

  1. அனைவரும் இதை உணர்ந்தால், நம் நாட்டை வளமாக்க முடியும்.
   என்று மஞ்சள் துணிப்பையைத் தாழ்வாக நினைத்து, பாலிதீன் பையை பயன்படுத்தி நிலத்தையும் உடல்நலத்தையும் அழிக்கத் தொடங்கினோமோ,
   அன்றிலிருந்து நமக்கு நோய் மட்டும் தான்.

   இன்று துவரம் பருப்பிற்கு, வெளிநாட்டில் ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
   நம் விவசாயிகள் வாழ்ந்தால், குறைந்த விலைக்கு அனைவராலும் வாங்கவும் முடியும். நம் மக்களும் வாழ முடியும்.
   உங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் நன்றி தோழி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *