பள்ளிப்பருவ நினைவுகளில் பேனாவிற்கும் ஓர் இடமுண்டு.

நாங்க பள்ளில படிக்கிற காலத்துல பேனா டப்பாலாம் வாங்கி கொடுக்க மாட்டாங்க. மை தீர்ந்த பிறகும், பேனா உடைந்த பிறகும் தான் புதிய பேனா வாங்கித் தருவாங்க. வருடம் வருடம் புத்தங்கள் எப்படி மாறுகிறதோ, அது போல எழுதுகோள்களின் தரமும் எங்களுக்கு மாற்றி அமைக்கப்படும். அதாவது பால்வாடி படிக்கும்போது சுண்ணாம்பு கல்லை வைத்து கரும் தகட்டில் எழுதினோம். அதன் பிறகு பென்சில். பின்பு மை பேனா .இறுதியில் இங்க் பேனா.

சின்ன வயசுல தவறுகளை மாற்றித் திருத்திக்க முடியும்னு பென்சில் கொடுத்தாங்க. வளர்ந்த பிறகு மாற்ற முடியாதுனு பேனா கொடுத்தாங்க போல.
அவங்க அவங்க வீட்ல இருக்க வசதிக்கு ஏற்றார் போல ஒவ்வொருவரும் பேனா வச்சுருப்பாங்க. ஒரு ருபாய் பேணால இருந்து விலையுயர்ந்த பேனாக்கள் வரை இருக்கும்.

சில பேனா வழ வழனு எழுதும். சிலது கூர்மையாக எழுதும்.

மை தீந்துடுச்சுனா, புதிய மைக்குச்சி வாங்கிப்போம் தவிர புதிய பேனாக்கள் அல்ல. மை தீர்ந்த மைக்குச்சியில்  இருக்கும் துல்லிய மணிக்குண்டை, மைக்குச்சியின் நுனியை தேய்த்து நீங்க எடுத்துருக்கீங்களா?

வளையம் பொருத்தப்பட்ட டிக் டிக் பேனா, பல பட்டன்கள் கொண்ட பேனா, அப்புறம் கிரிப் பேணானு எல்லாம் எங்களை கவர்ந்து கொள்ள வந்துச்சு.

பத்தாம் வகுப்பில், பொதுத்தேர்வுக்கு இங்க் பேணா கட்டாயம் அன்று சொல்லப்பட்டது.

இங்க் பேனா முனைத் தகடு எளிதாக உடைந்திடும்;

புதியதாக இருந்தால், காகிதத்தில் கீறும்;

வண்ணத்து திரவம் கீழே சிந்தும்;

சட்டையில் கரை படும்;

எளிதாக திரவம் குறைந்து விடும். 

இங்க் பேனா சிறிது காலம் எழுதிய பிறகே நமக்கு அது பொருத்தமாக எழுதும். திரவம் ஒழுங்காக வரவில்லை என்றால் முனைத்தகட்டை கீறி விடுவோம்.

முனை தகடுக்கு கீழே இருக்க மரக்குச்சியையும் பழுது பார்க்க வேண்டியதா இருக்கும் சில நேரங்களில்.

திரவ டப்பா பள்ளிக்கு எடுத்து வர முடியாது. அதனால் சில நாட்களில் கடைகளுக்குச் சென்று பத்து பைசாவுக்கு திரவம் நிரப்பிக் கொள்ளலாம். காம்ளின், கேமல், பிரில்  இங்க் திரவங்கள் அப்போது பிரபலமாக இருந்தது. திரவத்தை நிரப்ப ஒரு சிறிய கருவியும் இருக்கும்.

நண்பர்களிடம் இங்க் கடன் வாங்குவதற்கு, பேனாவின் தீவர நிரப்பியை திறக்கத் தேவை இல்லை. ஒரு சொட்டு இங்கை மேசை மேல் வைத்தால் போதும். பேணாவின் முனைத்தகடை வைத்து அதை உரிந்துவிடலாம்.

இன்றும் பலருக்கு hero பேனாவின் மீது ஏற்பட்ட காதல் நினைவிருக்கும். கூர்மையான தகடும் கொண்டது. பிற பேனாக்களின் வடிவில் இருந்து சிறிது வேறுபட்டதும் கூட. பேனாக்களின் இளவரசி என்று நான் கூறுவேன்.

இறுதியாக, ஆண்டு இறுதி தேர்வு கடைசீ பரீட்சை எங்களுக்கு மிக முக்கியம். தேர்வை முடித்துவிட்டு நண்பர்களின் சட்டையில் இங்க் அடித்து விளையாடுவது தான் அருமையான தருணங்கள். வேகவேகமாக எல்லோர் சட்டையிலும் இங்க் அடித்துவிட்டு தப்பிப்பதற்கு ஓட்டம் பிடிப்போம். சண்டை போட்டாலும் , சில நாட்களில் மறந்து விடும் மனப்பான்மை கொண்ட பருவங்கள் அவை.

இன்று காகிதத்தில் எழுதும் பழக்கம் மிகக் குறைந்து கைப்பேசிகளில் எழுதும் பழக்கம் வந்துவிட்டது.

கைப்பட எழுதிய கடிதங்கள், வாழ்த்து அட்டை, ஆண்டிருதித் தேர்வு கடிதங்களின் நினைவுகள் என்றும் சுவைத்துக்கொண்டே இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வாழ்த்து அட்டைகள் மூலம் கைப்பட எழுதி வாழ்த்துவோம்!

குறிப்பு: பேனா இங்க் புளிப்பு சுவை கொண்டது 🙂

காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும்; அது என்ன? ” என்ற விடுகதை தான் இப்பதிவை எழுதத் தூண்டியது.

நன்றி!

-சமரசம்

 

1 comment

  1. மறந்து போன நினைவுகளை நியாபகபடுத்தியதற்கு நன்றி. Ink ,slate ,tip , refil போன்ற சொற்களை தமிழாக்கம் செய்த விதம் அருமை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *