வெற்றிடத்தில் பறக்க பல செயற்கைகோள் தயாரிக்கும் இக்காலத்தில், பல கோடி குழந்தைகள் பிச்சை எடுப்பதைக் காணும்போதும்

உலகத்திற்கு நாகரிக வளர்ச்சியைக் கொடுத்த தமிழ் மக்கள் உலகம் முழுவதும் அகதிகளாய் திரிவதைக் காணும் போதும் 

children-vanni

சுதந்திரத்தைப் கொண்டாடும் இந்நாட்டில், மக்களைப் பிரித்து, ஒடுக்கி, அவர்களின் சுய உரிமைகள் பறிக்கப் படுவதைக் காணும்போதும்

சமத்துவம் பேசும் இந்நாட்டின் கோயில்களில், பணம் கொடுப்பவனுக்கு மட்டும் தனி அங்கீகாரம் என்பதை உணரும் போதும்

 

tamilnadu-fishermen2

கடலையே ஆண்ட தமிழன் இன்று பிழைப்புக்காக தன் கடலில் மீன் பிடிக்கச் சென்றால், அவனக்கு பாதுகாப்பு இல்லை என்று அறியும் போதும்

இன்று பித்தலாட்டம் செய்யும் அரசியல் வாதிகளின் பொய்யான போராட்டமும், பொய்யான உண்ணாவிரமும் மக்களை சென்று அடைகிறது,
அனால், அன்று என் தமிழன் எம் மக்களின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டதற்கு இன்றும் விடை கிடைக்க வில்லையே என்று நினைக்கும் போதும்

valluvam-dhileepan

எம்மக்களின் நிலங்கள், உரிமைகள் சூறையாடப்பட்டு, இன்று அவர்கள் போரின் வடுக்களை சுமக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு நிமிடமும் நினைக்கும் போதும், அவர்களின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கும் போதும்

clip_image0011

விருந்தோம்பலின் இலக்கண எழுத்துக்களான நம் தமிழ் மக்களுக்கு உணவும் இல்லை, உரிமையும் இல்லை என்று அழும்போதும்

உலகமே ஒன்று திரண்டு நம் வீரத்தையும், பல்லாயிரம் வருட அழகிய வரலாற்றையும் மறைக்கத் துடிக்கிறது என்று அறியும் போதும்

வெறும் இலக்கிய மொழியாக மட்டும் இல்லாமல், மனிதனுக்கு வாழ்வியல் முறைகளையும், இயற்கையைக் காக்கும் வழிகளையும், அறநெறிகளையும், நற்பண்புகளையும் கொடுக்கும் அழகிய தமிழ் மொழியை சிதைக்க விலங்குகள் பல உள்ளன என்று அறியும் போதும்

img-20160917-wa0009

உயிரும், உணவும் , கல்வியும் கொடுத்த பெற்றோர்களை மறந்துவிட்டு, நடிகர்கள் நடைமுறை வாழ்க்கையிலும் நடிக்கிறார்கள் என்பதை உணராமல் அவர்கள் பின்னால் திரியும் கூட்டத்தைக் காணும்போதும்

நம்முடைய உரிமைகள் பறிபோவதைக் கண்டும், நமக்கு இன்றும் ஒற்றுமை பிறக்கவே இல்லை என்று நினைக்கும்போதும்

உலகையே ஆண்ட நாம், இன்று எட்டுத் திசையிலும் அடிபடுவதை தடுக்க முடியவில்லையே என்று நினைக்கும் போதும்

உலகத்திற்கே உழவைக் கற்றுக்கொடுத்த நம் தமிழனின் நிலங்கள் அழிக்கப்படுவதையும், உழவனின் தேவைகள் முடுக்கப் படுவதையும் காணும் போதும்

img-20160917-wa0010

ஏறுதழுவுதல், பனைமரங்கள் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்படுவதைக் காணும்போதும்

sallikattu-panaimaram

 

இயற்கை வழிகளின் மூலம், சத்துள்ள உணவைத் தந்த நம் நிலங்கள் பல வேதியல் கழிவுகளுக்கும், நிலத்தைக் கெடுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் கொடுக்கப் படுவதைக் காணும்போதும்

வலிக்கிறது நெஞ்சம் 🙁 

8 comments

 1. உங்கள் கண்ணீருக்கு நன்றி.
  நம் அனைத்து உறவுகளும் அந்த மாற்றத்திற்காகத் தான் காத்துக்கொண்டிருக்கிறார்கள்

 2. பிடித்திருக்குது…மிகவும் அழகு!!

  வாசித்துக்கொண்டு இருக்கும்பொழுது நமது ஆற்று நீர் போராட்டம் பற்றி எங்கேயாவது குறிப்பிட்டிருக்கும் என்று எதிர்பார்த்தேன்…!!!

  வானம் , காற்று,நீர் இவை அனைத்தும் இயற்கை கொடுத்த வரம். அதை எப்படி தனி ஒரு கூட்டம் தனெக்கென்ன சொந்தம் கொண்டாடமுடியும்!!!

  தமிழனின் வழங்களெல்லாம் (அணு உலை, நெய்வேலி மின்சாரம், நரிமணம் எண்ணெய்…) எல்லாருக்கும் சொந்தம். ஆனால் இயற்கை கொடுத்த நீர் தனக்குமட்டும் சொந்தம்!!!

  சீமான் சொன்ன கருத்து எனக்கு நினைவிற்கு வருகிறது!!! – தகப்பன் இல்லாத வீடும், தலைவன் இல்லாத நாடும் தட்டுக்கெட்டு போகும்!!!

  எந்த உயிரும் தனக்கு துன்பம் வரும்போது காத்துகொள்ள இயன்றவரை போராடும்.தமிழன் ஒருவன் தான் இப்படி இன உணர்வும், ஒற்றுமையும் இல்லாமல் இப்படி இருக்கிறான் என்று வருந்தியது உண்டு…ஆனால் நம்பிக்கை இன்னும் குறையவில்லை…ஒரு நாள் நமக்குள்ளும் எழுச்சி பிறக்கும் என்ற தாகம் இன்னும் அணையவில்லை!!!

  தமிழன் எழுவான்!!!

  1. காயத்தில் ஆணி அடித்தது போல் இருக்கிறது உங்கள் வரிகள்.
   உலகிற்கு வுழவைக்க கற்று கொடுத்து, இப்பொது நம் உழவன் தண்ணீருக்கும், நிலத்திற்கும் ஏங்குகிறான்.

   ஆளும் அரசும் சரியில்லை, மக்களும் விழிப்புணர்வோடு இல்லை.
   இருந்த தலைவனும் இல்லை. நமக்கோ போராடும் தைரியம் இல்லை.

   ஒற்றுமை ஒன்றே நம் வுரிமைகளைக் காக்கும். அதை உணரும் போது தான், நமக்கு விடிவு காலம் பிறக்கும்.
   நம் ஒவ்வொருவர் மனிதிலும் கோவம் இருக்க வேண்டும், நம் உரிமைகள் பறிக்கப்படும் பொது.
   மீட்னுழு தமிழ், நம் இனத்தைக் காக்க!

 3. சினிமா கிரிகெட் போன்றவை பொழுதுபோக்கு என்பதை மக்கள் மறந்து விட்டனர். தனி மனிதனின் கோபம் ஆதங்கம் ஆகியவை வெறும் சமூக வளைத்தலங்களில் மட்டுமே. இவை மாறும் தறுவாயில் இருள் அகலும். வெளிச்சம் புலப்படும். அது வரையில் கண் இருந்தும் குருடர்களே!

 4. ஆம் தோழனே.
  என்று வலைத்தளங்களிலிருந்து தாண்டி, வெயிலில் நின்று நம் எதிர்காலத்திற்காக ஓட்டு போடுகிறோமோ, அன்று தான் நம் நிலை மாறும்.
  பலரின் அலட்சியத்தால் தான், போராளிகளின் உழைப்பு காற்றில் கரைகிறது.
  மனிதன் மனிதனை நேசிக்க வேண்டும், மனிதாபிமானத்தைக் காக்க வேண்டும்.
  எவ்வளவு காலம் நாமே நமக்குள்ளேயே அடித்துக்கொள்வது.

 5. நம்ம தாத்தா பாட்டிக்கு கை கொடுத்த விவசாயம் பல காரணங்களினால் ( தண்ணீர், உரம் ,விவசாயக்கூலி,விற்பனை மற்றும் இன்னும் பல ) நம்மளுக்கு கை கொடுக்கல. அரசியல் லாபத்துக்காக எல்லாத்தையும் நம்ம கைல தொட முடியாத தூரம் வச்சுட்டாங்க.ஒரு நாள் அல்லது வருஷத்திலோ எல்லாத்தையும் மாத்திட முடியாது. ஆனா முயற்சி எடுக்கணும். நம்ம முடிஞ்ச உதவிகளை விவசாயிக்கு செய்யணும். நாமளும் விவசாயம் கத்துக்கணும். எத்தனை பேரு எவ்ளோ மரம் செடி வளர்த்தோம்.இருபத்தி ஐஞ்சு வருசத்துக்கு மேல புத்தகத்தில் தொலைச்சாச்சு. முயற்சி பண்ணலாம்…

  1. ஆம் தோழி.

   நம் நாட்டில் மட்டும் தான் விவசாயிகள் ஏழைகளாக இருக்கின்றனர்.
   விவசாயம் செய்யும் பிற நாடுகளில், விற்பவன் விலையை நிர்ணயிக்கிறான். விவசாயிகள் ஏழைகள் செய்யும் தொழிலே அல்ல தோழி.
   அவர்கள் தான் வசதியானவர்களாக இருக்க வேண்டும் உண்மையில்.

   அனால், நம் அரசோ பெருநிறுவங்களுக்கு வேலை செய்வதால், வெளிநாட்டு இறக்குமதிக்கு ஒத்துழைப்பதாலும், நம் பயிர்களுக்கு போதிய மானியம் கிடைக்கவில்லை. காலப்போக்கில் அனைவரும் ஏழைகளாக மாறியதால், அவர்களுக்கு உரிமைகளும் கிடைக்காமல் இருக்கின்றனர்.

   நாமும் எதையும் உணராமல் பொறுப்பில்லாமல் வாழ்கிறோம். பணவீக்கமும் வலுபெற்றுவிட்டது.
   அடுக்கு மாடிகட்டிடங்களில் வேலை செய்பவன் மட்டுமே அதிக ஊதியம் பெறுவான் என்ற மனப்பாங்கு அனைவருக்கும் வந்துவிட்டது.

   மரம் உடனே பணத்தை பூக்கும் அனால், நாம் அனைவரும் மரங்களுடன் வாழ்ந்திருப்போம்.

   மரம் வெறும் காற்றையும், நிழலையும், நீரையும், உயிரையும் தானே தருகின்றது. 🙁

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *