ஒரு புதிய மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக புதிய நபர்களிடம் அதிக கேள்விகளைக் கேட்கமாட்டேன். அன்று என்னவோ தெரியல, அவங்கல பத்தி கொஞ்சம் தெரிஞ்சிகிட்ட பிறகு, மேலும் கேட்காம இருக்க முடியல. அந்தப் பெண் ஒரு மனிதஇன நுலர்(anthropologist – மனித இனம் மற்றும் முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை).
நம்ம ஊர்ல தடுக்கி விழுந்தாலே பொறியியல் இல்லனா மருத்துவம் தான் படிக்கப் போவாங்க. இளைஞர்கள் அரசு வேலைக்கு கூட அதிகமா போறதில்ல. அதனால எனக்கு 99% நண்பர்கள் பொறியியலாளர்கள் தான். குறிப்பாக முக்கால்வாசி பேரு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களில் தான் வேலை செய்றாங்க. நம்ம ஊர்ல தப்பி தவறி இது போல வேற அழகான துறையில இருந்தாங்கன்னா அவங்க கண்டிப்பா ஏழை குடும்பத்துல இருந்திருக்கணும். இதுபோல வேலைல நம்ம ஊர்ல சம்பாதிக்கறது ரொம்ப கடினம். அதனால வேறு துறை நிபுணர் என்பதால் இவங்க மேல ஒரு தனி மரியாதை வந்துடுச்சு.

மனதில் பெருமையும், புத்துணர்வும் பிறந்து படபடனு கேள்விகளைக் கேட்க ஆரமிச்சேன்.

1 . ஏன் இந்த துறை படிச்சீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?

அவங்க: 
ஏன் ஆ? சின்ன வயசுல இருந்தே எனக்குப் புத்தகங்கள் படிக்கப் புடிக்கும். எப்போவுமே புதுசு புதுசா தெரிஞ்சிக்க விருப்பப்படுவேன். உலகம் முழுக்க சுத்திப்பார்த்து எல்லா நாடுகளைப் பற்றியும் தெரிஞ்சிக்கணும்னு ரொம்ப ஆசை. அதனால தான் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். ஏன் இப்படி கேட்டீங்க?

நான்: இல்ல! பொதுவா எங்க ஊர்ல பணவீக்கம்(inflation) அதிகம் என்பதால் , நாங்க பொறியியல், மருத்துவம் போன்ற காசுப்படிப்பு தான் தேர்ந்தெடுப்போம். வேற ஏதா படிச்சா கூட, ஏதாவது ட்ரைனிங்ல வேற ஏதா கத்துக்கிட்டு வேற வேலைக்கு போனா தான் பிழைக்க முடியும். அப்புறம் என்னோட எல்லா நண்பர்களும் ஒரே துறை தான். அதனால வியந்து கேட்டேன்.
2 . உங்க வேலையெல்லாம் எப்படி இருக்கும்?

அவங்க: 
நான் ரெண்டு இடத்துல வேலை செய்யுறேன். ஒன்னு காட்சியகம்(museum) இன்னொன்னு கல்லோரில பகுதி நேர ஆசிரியர். மத்த ஊர்ல இருக்க போல வெறும் பொருள்களாக மட்டும் இருக்காது எங்க ஊர்ல இருக்க மியூசியம். நான் வேல செய்யுற மியூசியம், மனித வன்கொடுமைகள் பற்றிய தகவல்கள், வரலாற்று நிகழ்வுகளுக்கான பதிவுகள் சேகரிக்கப்பட்ட இடம். எனக்கு இங்க "சமுதாயத்தில் நடக்குற சிக்கல்கள் பற்றிய" கட்டுரைகள் எழுதுற வேலை. தினம் தினம் எதாவது ஆராய்ச்கிகள் செய்வோம்; புதிய மக்களை சந்திக்கணும். பின்பு கட்டுரைகள் எழுதி வெளியிடுவோம். மேலும் "பெண்ணுரிமை ஆதரவு(feminism)" பற்றிய கட்டுரைகள்லாம் கூட எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். எனக்கு புடிச்சத படிச்சு, அதுக்கேற்ற வேலையில் இருக்கேன். அதனால எவ்வளவு வேலை வந்தாலும், எழுதினாலும் இந்த வேலை எனக்கு வேலைசெய்ய ரொம்ப பிடிக்கும். "I am so proud to be an anthropologist".

கல்லோரில "மொழி மற்றும் கலாச்சாரம்" பாடங்களுக்கு நான் ஆசிரியை. ஒவ்வொரு நிமிடமும் அருமையா இருக்கும். சொல்லிகுடுக்கறதுல இருக்க சந்தோசம் வேற எதுல வரும். அதுவும் எனக்கு பிடிச்ச பாடத்திலிருந்து. தினம் தினம் எதாவது கத்துக்கலாம். சொல்லிக்கொடுக்கறது ஒரு அருமையான வாழ்க்கைத்தொழில்(profession). ரொம்ப பெருமையா இருக்கும் பாடம் நடத்தி அதுமூலம் நாம தினம் தினம் எதாவது கத்துக்கும்போது.
3. உங்கள் பொழுதுபோக்கு?
அவங்க:
அது மட்டும் இல்லாம, பிற நாட்டு காவியங்கள்லாம் படிப்பேன். வராலாற்று சிற்பங்கள் இருக்கும் இடத்துக்கெல்லாம் சென்று ஆவணமாக்கல்(documentation) செய்வேன். எனக்குப் புடிச்சதையே நான் செய்யறதால எனக்கு நான் செய்ற வேலையையும், பொழுது போக்கு செயல்களையும் பிரிச்சு சொல்ல முடியல. எல்லாமே எனக்கு ஒண்ணுதான். புடிச்சதே வேலைய அமைஞ்சா வாழ்க்கை முழுக்க வேலை செய்யலாம். பல ஊர்க்களுக்கு போயிடு வந்துட்டேன். இன்னும் பல இடங்களுக்கு போகணும். மத்தபடி நண்பர்களாம் அடிக்கடி ஒண்ணுசேர்வோம், கலகலன்னு வாய்பேசுவோம். சத்தம் போட்டு சிரிப்போம்.

4. எத்தனை மொழிகள் தெரியும்?

அவங்க:
எனக்கு நான்கு மொழிகள் தெரியும். எனது தாய் மொழி, ஆங்கிலம் , பிரஞ்சு, swakili. ஆப்பிரிக்கால இருக்க ஒரு ஆராய்ச்சியாளர் மூலம் நான் இந்த மொழியைக் (swakili) கற்றேன். வெளிநாட்டு மொழிகள் கற்கும்போது பல புதிய அனுபவங்கள் நமக்கு கிடைக்கும். மொழியை வைத்தே அவங்களோட கலாச்சாரத்தையும் தெரிஞ்சிக்க முடியும்.

மேலும் பல சொன்னாங்க. மெய்சிலிர்க்க வியந்து கேட்டு சுவைத்தேன் இந்த உரையாடலை.

எனக்கும், நேரம் கிடைக்கும்போது ஏதாவது பிடித்ததைச் செய்யணும்( ஓவியம், சுற்றுலா, புகைப்படம், மொழியியல், தோட்டம் வளர்ப்பு) அப்டி இப்டினு பெரிய பட்டியல் இருக்கு. பாப்போம் எவ்ளோ முடியுதுனு.

பிறகு பார்த்துக்கலாம்னு விட்டா காலம் கடந்து எங்கயோ போயிடுறோம். இனிமேலாச்சம் அந்த அந்த நேரத்துல புடிச்சத செய்வோம்.
அப்போதான் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தா கொஞ்சமாவது நல்லா இருக்கும். 

இவங்கள போல புடிச்ச செயல், பிழைப்புக்கு செய்யும் வேலையாக எல்லோருக்கும் அமைவது கடினம். ஆனா கிடைக்கும் நேரத்துல நமக்கு பிடிச்சதெல்லாம் செய்ய முடியும். செஞ்சா வாழ்வு பொருள்ளதாக அமையும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! வாய்விட்டு சிரிப்போம்!

உங்கள் கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன்!

நன்றி!
-சமரசம்

8 comments

  1. வாழ்த்துக்கள் தோழி! அருமையான செயல்கள்!
   மேலும் உங்களுக்கு பிடிச்சபோல பல செயல்கள் செய்து வாழ்க்கையை அழகாக்க வாழ்த்துக்கள்!

 1. தமக்கு பிடித்த வேலைகளை செய்யலாம் என்று பலருக்கு தேரன்றினாலும் இந்த பரபரப்பான நவீன உலகத்தில் யாருக்கும் அதை செய்ய நேரம் கிடைப்பதில்லை.பிடித்த வேலையை செய்ய யாரும் அனுமதிப்பதும் இல்லை. பார்க்கலாம்??!!!!! இனி வரும் காலங்களையாவது நமதாக்குவேரம்.

  1. ஆம் சகோதரரே!. அதே நேரத்தில் நேரம் கிடைப்பது இல்லை என்று சொல்வது இப்போது வழக்கம் ஆகிவிட்டது. நமது முக்கியத்துவங்களின் பட்டியலில் நம் வாழ்வதற்கான செயல்களை சேர்த்தால் கண்டிப்பாக நேரத்தை அதற்கும் செலவிட முடியும். முயற்சிப்போம்!

 2. This like a double treat for me. (both the content and presentation).

  I am much impressed on the presentation Samarasam, this show your potential and how you have groomed yourself on presenting your narration. this genres (Question and Answer) is a master piece in your blog till date in my view.

  Best wishes (Though I wish to type in tamil I am still lacking) தருணங்கள்…

  1. உன்னுடைய ஊக்கமிக்க வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *