கொஞ்ச நாளைக்கு முன்னாடி நண்பன் ஒருத்தனுக்கு போன் பண்ணேன். எடுத்த உடனே, வேகமா கேட்டான் “மச்சி, எதாவது ரொம்ப முக்கியமா? அப்புறம் கூப்பிடட்டா!” னு கேட்டான். “சரிடா, பாத்துக்கோ. அப்புறம் பேசலாம் ” னு சொல்லிட்டு வச்சுட்டேன்.

இன்னொரு நாள் இன்னொருத்தன கூப்பிடும்போது, அவன் அழைப்ப தூண்டிச்சு, “வேலைப்பளுல இருக்கேன். ஏதாவது முக்கியமாடா? “எனும் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினான்.. “எதும் இல்ல டா.. பேசி ரொம்ப நாளாச்சேனு கூப்பிட்டேன் டா!” என்று நான் பதில் அனுப்பினேன். அதுக்கு  “ஓ! .. சரி டா , வேற ஒரு நாள் பேசுவோம்” னு சொல்லி அந்த உரையாடல முடிச்சுட்டான்.

மற்றொருநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று அவனை அழைத்தேன். பயபுள்ள போனை எடுக்கவே இல்ல. குறுஞ்செய்தியும் இல்ல. சரி எங்கயாவது போயிட்டு இருப்பான் இல்ல தூங்கிட்டு இருப்பான்னு நெனச்சு விட்டுட்டேன். சரி, அழைப்பை பார்க்கும்போது தொடர்பு கொள்வான்-னு நினச்சேன்.
ஆனா, அடுத்த ரெண்டு நாளுக்கு ஒரு தகவலும் இல்ல. கோபத்தோடு நான் குறுஞ்செய்தி அனுப்பினேன். “ஏன்டா கால் வந்திருக்குனு பார்த்த பின்னாடியாவது ஒரு குறுஞ்செய்வதாவது அனுப்பி என்னனு கேக்கலாம்ல” னு கேட்டேன். அதற்கான பதில் “தூங்கிட்டு இருந்தேன் டா!,  முக்கியம்னா நீயே சொல்லியிருப்பியே. நீ எதுவும் சொல்லாததால, நான் கேட்கல. மன்னிச்சுடு டா!, ஏதா ரொம்ப முக்கியமா?” என்று வந்தது.

இதே போல இன்னொருநாள், ஒருத்தன் மாட்டினான்.. கோவமா கேட்டேன். “ஏன்டா எத்தனை முறை உனக்கு கூப்பிடறது? எடுக்கவே மாட்டியா? ” னு கேட்டேன். 
எதுக்குடா? சும்மாதானே கால் பண்ண?” னு அவன் கேட்டான்.

உங்க எல்லோருக்கும் சொல்றேன். ஆமா, உங்க எல்லாருக்கும் சும்மா தான் கால் பண்ணேன். பேசி ரொம்ப நாளாச்சே! என்ன பண்ற? எப்படி இருக்க? ஆளையே காணோம், ஒரு செய்தியும் இல்ல, வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க? வேல எப்படி போகுது? என்னைக்காவது நேர்-ல பாக்கலாமா? னு கேக்கறது கூப்பிட்டேன். 

எல்லாரும் இப்போ பிசியாத்தான் ஓடிக்கிட்டு இருக்கோம்.
அதுக்காக ஏதாவது முக்கியமானத்துக்கு மட்டும் தான் பேசணும்னா நாளடைவில் பேச்சு கொறஞ்சு, தொடர்பு இல்லாம நமக்குள்ள இருக்கிற பாசம் நேசம் பந்தம் எல்லாம் கொறஞ்சிடும். கடைசியில் அந்நியர்களாகிடுவோம். 

ஆமாம்.. அது என்ன? " சும்மா பேசினா? அது சாதாரணமா?" உங்கள கூப்பிட்டா நான் சும்மா இருக்கேன்னு இல்ல?

இந்த காலகட்டத்துல எல்லாருக்கும் பிரச்சனைதான். இப்படிப்பட்ட சூழல்ல ஒரு ஐந்து நிமிடம் சும்மா சிரிச்சு பேசினா எல்லாருக்கும் நல்லது. 

சொல்ல போனா, யாருக்கும் நேரமில்ல தான். “குழந்தைகள், பணி நிமித்தமான மன அழுத்தம், எரிச்சல், தூக்கமின்மை, பிற பிரச்சனைகள்” னு எல்லோருக்கும் பேசாமல் இருக்க ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆனா, அதுக்காக பேசாமல் இருக்க கூடாது.

அழைப்பை எடுக்க முடியாளானாலும் பரவால்ல. அத பார்த்துட்டு மறக்காம, அடுத்து நேரம் கிடைக்கும்போதாவது கூப்பிடுங்க..

திரும்ப சொல்றேன். முக்கியமான தகவல் பெரும் / கூறும் அழைப்பைவிட , சும்மா எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் சிரிச்சு பேசும் அந்த அழைப்புதான் பெருசு.

அதனால இதுபோல வரும் “சும்மா” அழைப்பையெல்லாம் கண்டுக்காம விட்டுடாதீங்க.! 🙂

இந்த ஒளித்தோற்றத்தை(video) மறக்காம கொஞ்சம் பாருங்க. சிரிப்பும் மிக முக்கியம்.

 

கோபத்துடன்,
– சமரசம்

11 comments

 1. நல்ல பதிவு சமரசம்! குறிப்பாக… “அது என்ன சும்மா பேசினா? அது சாதாரணமா? உங்கள கூப்பிட்டா நான் சும்மா இருக்கேன்னு பொருளா?”. மிகவும் உண்மையான பதிவு.

  1. நன்றிங்க உமா! பல முறை உணர்ந்திருக்கிறேன். நானும் அப்படித்தான் இருந்தேன் சில காலம் முன். இப்போது பேச்சே குறைந்துவிட்டது.. அது போதாமல், எல்லோரும் எதா முக்கியமா னு கேக்குறாங்க…

 2. I have also ignored few calls like this. Your call too 😁 I will at least reply to calls hereafter.. I also feel that after 2 mins of normal conversation I am blank on topics and there s nothing much to speak to some friends.. don’t know why

  1. எல்லோருக்கும் பேசுற பழக்கம் கோரஞ்சதால தான் இப்போலாம் எல்லாம் சில நிமிடங்களில் திரு திருவென்று முழித்துவிட்டு பேச்சை நிறுத்திடுறோம்.. பழைய போல சிரிக்க கத்துகிட்டாலே போதும் எல்லோரும் மாறிடுவாங்க..

 3. naaye naaye nandraga yosithu paaar unna ethana mura kuptirupen nerala vaada nu 🙂 epdi iruka eppo vara inga 😀 nice write up!

   1. ☺️ நானும் மன்னிப்பு கெட்டே தீருவேன் டா.. பெரிய குற்றவுனர்ச்சி இருக்கு உன்னோட அழைப்பை பல முறை எடுக்கவே இல்லன்னு.. இனிமேல் கண்டிப்பா பதில் அளிப்பேன் டா.. இந்த விடயத்துல நீ எவ்ளோ வேணா என்ன திட்டு.. நானும் கொஞ்சம் திருந்தனும்..

  1. 😔😔😔😊 ஆமாம்.. இந்த வலைப்பதிவை எழுதும்போது உன்னை நினைத்து பெரும் குற்ற உணர்ச்சி. உன்னுடைய பல அழைப்பை எடுக்கவே இல்ல னு ..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *