குழந்தை பிறந்த பிறகு, தன் வலியை மறந்து குழந்தையைப் பார்த்து மகிழும் அன்பு! அழகு!

ஒற்றுமையையும், கடின உழைப்பையும் உணர்த்தும் தேனீக்களின் உழைப்பு! அழகு!

பதவியும் பணமும் உயர்ந்தாலும், தன் குறிக்கோளை மாற்றாமல் பணிகளைச் செய்வது! அழகு!

இயற்கையோடு சேர்ந்து வாழ்வது இனிது! அழகு!

பெரியோர்களையும், சிறியோர்களையும், கற்றோர்களையும், கல்லாதவர்களையும் மதிக்கும் பணிவு! அழகு!

தன் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் உலகின் மிக வலுவான ஆயுதமான எழுத்து! அழகு!

சுயநலமற்ற மனிதர்களைக் காண்பது அரிது! அது அழகு!

உழைப்பின் வேர்வையில் கறை கொடுக்கும் அழுக்கு! அழகு!

உலகமே பார்வைக்குறைவுடன் பார்க்கும் கருப்பு! அழகு!

தவழும் குழந்தைகளின் அசைவு! அழகு!

இன்னும் பற்பல உண்டு. ஆழமாகப் பார்த்தால் தான் அழகை அறிய(காண) முடியும்

-சமரசம்  

9 comments

 1. Super… Specially…
  “உலகமே பார்வைக்குறைவுடன் பார்க்கும் கருப்பு! அழகு!”

  1. இது உண்மை தானே நண்பரே?

   உழைப்பாளிகளின் அடையாளம் அது!

  1. உண்மை தோழி. தமிழை விட அழகு வேறு எதுவும் இல்லை.

   உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

   வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

 2. இந்த வரி “உலகமே பார்வைக்குறைவுடன் பார்க்கும் கருப்பு! அழகு!” எனக்கு மிகவும் அழகாக தோன்றியது!!!

  வெள்ளை உடம்பில் சிறு கருப்பு புள்ளி இருந்தால் அது மச்சான் -அழகு!!!
  கருப்பு உடம்பில் வெள்ளை புள்ளி இருந்தால் அது தேம்பல் – வியாதி!!!

  வெள்ளை உடம்பில் கருப்பாக இருப்பது எல்லாமே அழகு(உதாரணம் -முடி, கண்…)

  இன்னும் பல உதாரணம் சொல்லலாம் – வெள்ளை தாளில் கருப்பு மை அழகு!!!

  கருப்பை ஏளனமாக பார்க்கும் கண்களில் இருக்கிறது கருப்பு!!!

  பச்சை தமிழனும், நமது பாட்டாளி வர்க்கமும் கருப்பு என்பதில் நமக்கு பெருமையே தவிரே ஒரு போதும் சிறுமை ஆகாது!!

  1. ஆம் நண்பரே, கருப்பை ஏளனமாகப் பார்க்கும் அனைவரும் மனதில் கருப்பை சுமக்கிறார்கள்.

   உங்கள் வரிகளும் எடுத்துக்காட்டுகளும் இந்தப் பதிவுக்கு மேலும் வலுவைக் கொடுக்கின்றன. ஆயிரம் நன்றிகள் உங்களுக்கு.
   என்றும் கருப்பு பெருமை தான். வாழ்க தமிழனும் தமிழ் நெறியும்!

 3. பெரியோர்களையும், சிறியோர்களையும், கற்றோர்களையும், கல்லாதவர்களையும் மதிக்கும் பணிவு! அழகு!
  👌👌👌👌

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *